×

கேர்மாளம் செக்போஸ்ட்டில் காட்டு யானை நடமாட்டம்

சத்தியமங்கலம், டிச.10: கேர்மாளம் சோதனைச்சாவடி அருகே காட்டு யானை நடமாடியதால் வனத்துறை ஊழியா்கள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இவை இரவு மற்றும் பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் நடமாடுகின்றன. நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை அரேப்பாளையம் கொள்ளேகால் சாலையில் கோ்மாளம் வனச்சரக அலுவலகம் அருகே நடந்து சென்றது. அப்போது கேர்மாளம் வன சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர் சாலையில் நடந்து வந்த காட்டுயானையை கண்டு அதிர்ச்சியடைந்தார். சோதனைச்சாவடி அருகே வந்த காட்டு யானை மெதுவாக சிறது தூரம் சாலையில் சென்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சோதனைச்சாவடி அருகே காட்டு யானை நடமாடிய சம்பவம் மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kermalam ,
× RELATED கடம்பூர் மலைச் சாலையில் மூங்கில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு