தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி நவரசம் அகாடமி பள்ளி மாணவர்கள் சாதனை

மொடக்குறிச்சி, டிச.10: டென்னிஸ் பால் கிரிக்கெட்  பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நாமக்கல்லில்  நடைபெற்றது. இதில் அரச்சலூர் தி நவரசம் அகாடமி (சிபிஎஸ்இ) பள்ளியைச் சார்ந்த 10 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும்   தமிழ்நாடு அணிக்காக பங்கு பெற்று சிறப்பாக விளையாடினார்கள். இதில் தமிழக ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும், தமிழக பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். தி நவரசம் அகாடமி பள்ளியின் தலைவர் கதிர்வேல்,செயலாளர் கார்த்திக்,தாளாளர்அருண் கார்த்திக்,பொருளாளர் பொண்ணுவேல், துணைத்தலைவர் மதியரசு மற்றும்  கல்லூரி பொருளாளர் பழனிச்சாமி  ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.  தமிழ்நாடு யு-14 டென்னிஸ் பால் கிரிக்கெட்  அணியின் பயிற்சியாளராக தி நவரசம் அகாடமி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கோகுல் பிரசாத் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: