சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 14 தடகள வீரர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

திருமுருகன்பூண்டி, டிச.10: திருப்பூர், திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டரின் சாய் கிருபா மெடி டிரஸ்ட் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு விளையாட்டிற்கான அனைத்து வசதிகளையும் சாய் கிருபா மெடி டிரஸ்ட் செய்து வருகிறது. கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் சாய் கிருபா மெடி டிரஸ்ட் பயிற்சி எடுத்து வரும் மாரி ஆனந்த், பிரதன் மோஹன், மாதவன், சந்துரு, தனுஷ், சந்தோஷ் குமார், குணா நிதி, விக்னேஷ், ராகுல், தருண் பாஸ்கர் மற்றும் மாணவிகள் மஞ்சுஸ்ரீ, செளமியா, ஜித்வர்ஷா, ரிஷிவர்ஷா ஆகிய 14 மாணவ, மாணவிகள் 14,16,18 மற்றும் 20வயதிற்குட்பட்ட பிரிவுகளில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று  மாநில அளவிலான ஓப்பன் தடகள போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தடகள கோச் பாரதிராஜா தலைமையில் வருகிற 8ம்தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள என்பிஆர் கல்லூரியில் நடக்க உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க செல்கின்றனர். மாநில போட்டிக்கு தேர்வான தடகள வீரர்களை பாராட்டி அவர்களுக்கு வழியனுப்பு விழா சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் நடந்தது. சாய் கிருபா மெடி டிரஸ்ட் பொருளாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். சுகன் சுகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வீரர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?  உடல்ரீதியாக எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்? போட்டிக்கு எப்படி நம்மை தயார் செய்துகொள்ளவேண்டும்? என்பது உள்பட பல்வேறு யுக்திகளை விளக்கி பேசினார்கள்.

Related Stories: