தென்காசியில் அன்பகம் கலைக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

செங்கோட்டை, டிச. 10:  தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலைக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, நேற்று காலை பொதிகை ரயில் மூலம் தென்காசிக்கு வருகை தந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) சிவபத்மநாபன், (வடக்கு) செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, பேபி, ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், ராமையா, லாலா சங்கரபாண்டியன், பூசை பாண்டியன், நகர செயலாளர்கள் செங்கோட்டை ரகீம், புளியங்குடி ராஜகாந்த், கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, தென்காசி யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, யூனியன் துணை சேர்மன்கள் தென்காசி கனகராஜ் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஜபருல்லாகான், மகளிரணி தமிழ்செல்விமுருகன், உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர்கள் முத்துவேல், சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், குட்டி என்ற சீதாராமன், முருகானந்தம், அரபாத், சுவைபுயாசின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: