முப்படை தலைமை தளபதி மறைவு ஒன்றியக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்

முத்துப்பேட்டை, டிச.10: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர்கள் அமுதா, தமயந்தி, துணைத்தலைவர் கஸ்தூரி, பிடிஓக்கள் ராதாகிருஷ்ணன், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பழனிவேலு, ரோஜாபானு, அனிதா, ஜெயராமன், ஜாம்பை கல்யாணம், ராதா, ராஜா, யசோதா, மோகன், தேவகி, சுமதி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களின் கவுன்சில் தொகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் அன்பழகன், தேவகி, பாக்கியம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: