×

வட்டார மருத்துவ அலுவலர் தகவல் குடந்தை வேலம்மாள் போதி கல்வி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை தேர்வு


கும்பகோணம்,டிச.10: தமிழகம் முழுவதும் இயங்கிவரும் வேலம்மாள் கல்வி நிறுவனம் கும்பகோணம் வேலம்மாள் போதி வளாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஸ்காலர்ஷிப் தேர்வு என்ற திட்டத்தின் கீழ் திறன் வாய்ந்த பல மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. வருகிற 2022-2023-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு உதவி தொகை தேர்வு வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த கல்வி உதவி தொகை தேர்வுக்கு 5ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனால் வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் மாணவ மாணவிகளுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை கிடைக்கும். மாணவ-மாணவிகள் மெரிட் ஸ்காலர்ஷிப் தேர்வுக்கு விண்ணப்பிக்க வலைத்தளத்தில் பதிவு செய்யலாம். இந்த தேர்வில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள வேலம்மாள் போதி வளாகத்தில் நடைபெறுகிறது. எனவே கல்வி உதவி தொகை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயன்பெற வேண்டுமென வேலம்மாள் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags : Kuttan Velammal Bodhi Educational Institute ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...