முப்படை தளபதி மறைவுக்கு அனைத்து கட்சியினர் இரங்கல்

மயிலாடுதுறை, டிச.10: இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறையில் தேசிய ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திமுக, தமாகா, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மவுன ஊர்வலமாக வந்து பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர். கூறைநாட்டில் தொடங்கிய அமைதிப் பேரணி முத்துவக்கீல் சாலை பகுதியில் நிறைவடைந்தது. இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாநில ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேதாரண்யம்: வேதாரண்யம் வடக்கு வீதியில் முப்படை தளபதி பிபின் ராவத் படம் வைக்கபட்டு மலரஞ்சலி செலுத்தினர். நகர பாஜக தலைவர் அய்யப்பன் பொதுச் செயலாளர் சீனிவாசன், நகர துணை தலைவர் திருமுருகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முரளி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஹரிகிருக்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராளுன் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட சட்ட ஆலோசகர் சுதாகர் மற்றும் மாவட்டஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: