×

அரசு அறிவிப்புகளை செயல்படுத்த வலியுறுத்தி வி.சி.கட்சி ஆர்ப்பாட்டம்

காரைக்கால், டிச.10: தீபாவளி பரிசு பொருட்கள் வழங்குதல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் என புதுச்சேரி அரசு அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் செயல்படுத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும், உடனே அவற்றை செயல்படுத்த கோரியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காரைக்காலில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிரவி - திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விடுதலை கனல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : VC party ,
× RELATED கும்பகோணத்தில் போலீசாரை கண்டித்து வி.சி கட்சி ஆர்ப்பாட்டம்