×

முசிறி பகுதியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை பயிற்சி

திருச்சி, டிச.9: முசிறி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் 2021-22ம் ஆண்டு மண்வள அட்டை இயக்கம் கீழ் கரட்டாம்பட்டி கிராமத்தில் மண்வள அட்டை இயக்கம் என்ற தலைப்பில் மண் வள அட்டை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு முசிறி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நளினி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்து “மண் வளமே விவசாயிகளின் நலம்” மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையில் உள்ள பரிந்துரையின்படி உரமிட்டு கூடுதல் மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக வேளாண்மை அலுவலர் ரமேஷ் வரவேற்றார்.

எம்ஐடி வேளாண்மை கல்லூரி மண்ணியியல் பேராசிரியர் திவ்யபாரதி மண் மாதிரி எடுத்தல், பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறைகளைக் கண்டறிதல், நிவர்த்தி செய்தல் குறித்தும் விளக்கமளித்தார். மண்பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி மண்வள அட்டையின் பயன்பாடு,பயன்படுத்தும் முறைகள், நீர் பரிசோதனை செய்தலின் அவசியம், சுண்ணாம்புச்சத்து தன்மையுள்ள மண்ணின் தன்மையினை கண்டறிதல் குறித்து செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.

திருச்சி மாவட்ட உர தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் முருகவேல் விவசாயிகளிடம் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெறுவதினால் மண்ணுக்குப் பொருந்தக்கூடிய பயிர்கள், மண்ணில் உள்ள சத்துக்கள், மண்ணிற்கு தேவையான தழை ச்சத்து. மணிச்சத்து, சாம்பல்சத்து உள்ளிட்ட சத்துகளின் தேவை அறிந்து உரமிடலாம் என ஆலோசனை வழங்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். மண் மாதிரி பெறப்பட்டு மண்பரிசோதனை செய்து ஆய்வு அறிக்கை வரப்பெற்ற விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் மண்வள அட்டையினை வழங்கினார்.

Tags : Musiri ,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு