×

பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை,டிச.9:  பாளை சாரதா கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளிடத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பாளை சாரதா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சங்கு தலைமை வகித்து பேசுகையில், ‘தற்போதைய நவீன உலகத்தில் பலர் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். நம்மை நேசிப்பது போல் அன்பாக பேசி நமது படங்கள், வீடியோக்களை சேமித்து வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் முகநூலில் அதிகரித்துள்ளது. எனவே மாணவிகள், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் செல்போனில் முன்பின் தெரியாதவர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  வங்கிகளில் இருந்து பேசுவது போல் பேசி உங்கள் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் முன்பணம் கட்ட கூறினால் நம்பி ஏமாந்து விடாதீர்கள். செல்போனில் தேவையற்ற செயலியை பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ வேண்டாம். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 155260 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 181, 1098 இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.  நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ், எஸ்ஐ ராஜரத்தினம் மற்றும் கல்லூரி ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.

Tags : Palai Sharda Women's College ,
× RELATED கொக்கி மாட்டி மின்சாரம் திருட்டு:...