காளையார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு பஸ் வசதி வேண்டும்

காளையார்கோவில், டிச.9: காளையார்கோவிலில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் பொதுமக்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். காளையார்கோவில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் பொது மக்களுக்கான எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. தாலுகாவிற்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் தாலுகாவிற்கு வந்து செல்கின்றனர். மேலும் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் முதியவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்சை தாலுகா அலுவலகம் வழியாக செல்லவும் அலுவலகம், முன்பாக நிறுத்தம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் தாலுகா அலுவலகத்திற்கு  செல்ல பஸ் வசதிகள் குறைந்தபட்சம் தனியார் மினி பஸ்சையாவது ஏற்பாடு செய்ய வேண்டும். தாலுகா பஸ் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Related Stories: