அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா

கமுதி, டிச.9:  கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள் விநாயகர், பூர்ணம் பொற்கொடி, நிறைகுளத்து அய்யனார், இருளாயி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம்  மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம், பூரணகுதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை,கோ பூஜை,மஹா பூர்ணாகுதி கும்பம் கடம் புறப்பாடு ஆலயம் வலம் வந்து ஆலய ஸ்தூபி, கோபுரம்,ஆ லய மூலஸ்தான  தெய்வங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள், அலங்காரம்  நடைபெற்றது. இதில் கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: