×

ரூ.13 லட்சம் மோசடி

மதுரை, டிச. 9: மதுரையில் மனமகிழ் மன்றம் துவக்கி, லாபம் ஈட்டித் தருவதாக கூறி, டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை தெற்குவெளிவீதியை சேர்ந்த சதீஷ்வரன், எல்லீஸ் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஒத்தக்கடையே சேர்ந்த பாலமுருகன். மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும், நாகமலை  டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும், என்ஜிஓ காலனி 6வது தெருவைச்சேர்ந்த அய்யர்(41) என்பவரை அனுதி மனமகிழ் மன்றம் துவக்கி, அதிக லாபம் ஈட்டலாம் என்றும் இதற்கு ரூ.1கோடி வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இதற்கான உங்கள் பங்குத்தொகை ரூ.20 லட்சத்தை நீங்கள் கொடுத்துவிட்டால், மற்ற அனைவரும் சேர்ந்து, பணம் போட்டு மனமகிழ் மன்றம் துவக்கலாம் எனக்கூறினார். இதை நம்பிய அய்யர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சம் வரை கொடுத்துள்ளார். இதற்கிடையே, சதீஷ்வரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, வைரவா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் வரும் வருமானத்தை அய்யருக்கு தரவில்லையாம். மேலும், அந்த மனமகிழ் மன்றத்தை வேறுசிலருக்கு விற்றுவிட்டனர். இதைத் தெரிந்துகொண்ட அய்யர் தனது பணத்தையாவது திரும்பத்தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தருவதாக கூறி அய்யரை அலக்கழித்துள்ளார். இதனையடுத்துதான் தனது பணம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அய்யருக்கு தெரியவந்தது. இதன்பின், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அய்யர் புகார் செய்தார். இந்தப்புகாரின் பேரில், சதீஷ்வரன் உள்ளிட்ட மூவர் மீதும், இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு