நாகர்கோவில், டிச.9: நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நாகர்கோவில் மாநகரில் கம்பளம் சந்திப்பு முதல் ஈத்தாமொழி பிரிவு வரை பாதாள சாக்கடை பணி டிசம்பர் 9ம் தேதி (இன்று) முதல் நடைபெற இருப்பதால் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புனித சவேரியார் கோயில் சந்திப்பு மார்க்கமாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் ,கம்பளம் ஜங்ஷனில் இருந்து ரயில்வே பீடர் ரோடு மார்க்கமாக, நாயுடு மருத்துவமனை ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.