விழுப்புரத்தில் துணிகரம் துணை தாசில்தார் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

விழுப்புரம், டிச. 9: விழுப்புரத்தில் துணை தாசில்தார் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் ஹைவேஸ் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன்(38). இவர் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். குடும்பத்துடன் சென்ற அவர் அங்கிருந்து நேராக கோயி லுக்கு சென்ற நிலையில் அவரது மனைவி தீபா நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை, ரூ. 6 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குபேந்திரன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

Related Stories: