×

20 ஆண்டுகளுக்கு பின் சிவகாசி பெரியகுளம் கண்மாய் நிரம்பியது

சிவகாசி, டிச. 8: சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சிவகாசியை சுற்றியுள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. சிவகாசி நகரில் உள்ள பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. இதனால் சிவகாசி நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் போர்வெல்லில் தண்ணீர் வராததால் நகராட்சி குடிநீரை மட்மே நம்பி இருந்தனர். மேலும் சிவகாசி பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சிவகாசியில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வந்ததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதுடன், கால்நடைகள் வளர்ப்போடும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

இந்நிலையில் சிவகாசி பகுதியில் தொடர் மழை காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பியது. இதனால் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சிறுகுளம் கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இக்கண்மாயில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் மாசடையும் வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சிறுகுளம் கண்மாய் பகுதியல் குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sivakasi ,Periyakulam ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...