×

வடக்கன்குளத்தில் ரூ.12.85 லட்சத்தில் சாலை பணி

பணகுடி, டிச. 8: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வடக்கன்குளம் ஊராட்சிக்குட்பட்ட மவுன மடம் முதல் ஊராட்சி குப்பை கிணறு வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.85 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை யூனியன் சேர்மன் ராஜா ஞானதிரவியம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வடக்கன்குளம் பங்குத்தந்தை சகாயராஜ், யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி அய்யாக்குட்டி, அவைத்தலைவர் சிவகாளியப்பன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், சங்கு நகர் கிளை செயலாளர் ஜயப்பன், வடக்கன்குளம் கிளை இளைஞரணி அமைப்பாளர் ராஜ், எழிலரசன், ராதா, சார்லஸ், சந்திரன், மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vadakkankulam ,
× RELATED மாநில அளவிலான நீச்சல் போட்டி வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை