சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் தென்காசி எஸ்பி ஆய்வு

சிவகிரி, டிச. 8: சிவகிரி காவல் நிலையத்தில் தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் வருடாந்திர தணிக்கை ஆய்வு நடத்தினார். அங்குள்ள காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டார். பழைய வாகனங்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்துவது குறித்து எஸ்பி  அறிவுரை வழங்கினார். காவலர்கள் உடைமை, பொருட்கள், காவல் நிலையத்தில்  பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள், காவலர் வார விடுமுறைகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில்  புளியங்குடி டிஎஸ்பி சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மனோகரன், எஸ்ஐ  அமிர்தராஜ், சிறப்பு எஸ்ஐக்கள் மகாலிங்கம், நவமணி, செல்வகிருஷ்ணன்  மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: