பழனிநாடார் எம்எல்ஏ பிறந்த நாள் விழா நல உதவிகள் வழங்கி காங். கொண்டாட்டம்

சுரண்டை, டிச. 8: தென்காசி மாவட்ட காங். தலைவர் பழனிநாடார் எம்எல்ஏ 69வது பிறந்த நாள் விழா, நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுரண்டை ஆலடிப்பட்டியில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான மாடன் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பழனிநாடார் எம்எல்ஏ கலந்து கொண்டு தரிசனம் செய்தார். குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள ஓம் பிரணவ ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அய்யாபுரத்தில் காமராஜர் சிலைக்கு பழனிநாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அய்யாபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாம்பவர்வடகரை நகர காங். தலைவர் பழனிக்குமார் என்ற முருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பும், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. சுரண்டை நகர காங். தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் ஏற்பாட்டில் பழனி நாடாருக்கு ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காங். சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. சுரண்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த விழாவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகளை பழனிநாடார் எம்எல்ஏ பெற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உதயகிருஷ்ணன், நகர தலைவர்கள் சுரண்டை ஜெயபால், புளியங்குடி பால்ராஜ், மாவட்ட துணை தலைவர் பால் என்ற சண்முகவேல், வட்டார தலைவர்கள் கீழப்பாவூர் தெய்வேந்திரன், மேலநீலிதநல்லூர் முருகையா, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் பிரபாகரன், நாட்டாமை ராமராஜ், மெரிட் சோப் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சமுத்திரம், ஊடகப்பிரிவு சிங்கராஜ், அரவிந்த், கந்தையா, கஸ்பா செல்வம், தாயார் தோப்பு ராமர், சேவாதள தலைவர் வள்ளிமுருகன்,  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முதல்வருக்கு நன்றி

பழனி நாடார் எம்எல்ஏ கூறுகையில், தென்காசி பகுதி மக்கள் மற்றும் எனது கோரிக்கையான குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்காசி கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது பிறந்த நாளன்று அனுமதி கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ராகுல்காந்தி பிரதமராக காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும். எனக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Related Stories: