×

நன்னிலம் அருகே சேங்கனூரில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

நன்னிலம், டிச. 8: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சேங்கனூர் ஊராட்சிநன்னிலம் ஒன்றியம் வட்டார வள மையம் சார்பில் இல்லம் தேடி கல்விதிட்டம், விழிப்புணர்வு பிரசார இயக்கம், நடைபெற்றது. பிரசார இயக்கத்தை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை தலைமையில், சேங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி கொம்பு ராஜ் தொடங்கி வைத்தார். அடிப்படைக் கல்வியின் அவசியம் குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், ராஜ்குமார் பேசினர். அதனைத் தொடர்ந்து கற்றல் கற்பித்தலில் அவசியம் குறித்து, வட்டார வளமைய ஆசிரியர்களின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் வாழ்க்கை சேங்கனூர், உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Chengannur ,Nannilam ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...