மன்னார்குடி, டிச. 8: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை பயிர் காப்பீடு தொடர்பாக தாசில்தார் ஜீவானந்தம் தலை மையில் சமாதான கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
கூட்டத்தில், பாலையூர் சரகத்திற்குட்பட்ட புத்தகரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மண்டல துணை வட்டாச்சியர் நாகராஜன் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.அப்போது, மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோயில் அருகே உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் குடி போதையில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
பின்னர், சமாதான கூட்டம் நடந்த அரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாசில்தார் ஜீவானந்தம், மண்டல துணை வட்டாச்சியர் நாகராஜன் ஆகி யோரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும், ஒருமையில் திட்டியும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அலுவலகத்தில் இருந்த கோப்புகளை சேதப் படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்டோர் அவரை தடுக்க முயற்சித்த போது யாராவது என்னை பிடிக்க முயற்சித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து டவுன் எஸ்ஐ முருகன், எஸ்எஸ்ஐ கோமகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ரகளையில் ஈடுபட்ட ராஜேஷை பிடித்து அருகில் உள்ள நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தலைமையிடத்து துணை வட்டாச்சியர் கிருஷ்ணகுமார் மன் னார்குடி நகர காவல் நிலையத் தில் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலச்சந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.
கத்தரி ரூ.- 84
தக்காளி - 90
வெண்டை - 80
அவரை - 106
கொத்தவரை - 68
முருங்கை - 60
முள்ளங்கி - 60
புடலை - 70
பாகல் - 86
பீர்க்கன் - 36
வாழைக்காய் - 20
வாழை பூ, தண்டு -10, 5
பீட்ரூட் - 50
சேனை - 38
பரங்கி - 22
பூசணி ரூ.- 22
சுரை - 50
மாங்காய் - 54,64
தேங்காய் - 16,18,20
எலுமிச்சை - 56
நார்த்தை - 20
கிடாரை - 40
சின்ன வெங்காயம் - 64
பீன்ஸ் - 96
கேரட் - 78
உருளை - 36
கோஸ் - 70
சவ் சவ் - 40
காளிபிளவர் - 100
கீரை - 15
பெட்ரோல் லிட்டர்: ரூ.102.36
மன்னார்குடி
உழவர்சந்தை
1 கிராம் .... ரூ.4,514
1 பவுன் .... ரூ.36,112
டீசல் லிட்டர்: ரூ.92.40