×

நீடாமங்கலம் அருகில் சித்தமல்லியில் கால்நடை சிறப்பு தடுப்பூசி முகாம்

நீடாமங்்கலம்,டிச.8: நீடாமங்்கலம்் அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் சார்பில் கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து நடத்திய கால்நடை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்்றியக்குழு தலைவர்் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தனபாலன் இந்த முகாமில் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து பானங்களை வழங்கினார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் டாக்டர் சபாபதி தலைமையில் கால்நடை மருத்துவ குழு அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளித்தது.

டாக்டர் ஜெயபாலன் நீடாமங்கலம் அரசு கால்நடை மருத்துவர் மற்றும் டாக்டர் பிரவீன், முன்னாள் கோட்டை அரசு கால்நடை மருத்துவர் ஆகியோர் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் 153 மாடுகளுக்கு வாய்க்காணை தடுப்பூசி போடப்பட்டது. 203 ஆடுகள் மற்றும் 311 செம்மறி ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. முகாமின் சிறப்பு அம்சமாக மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்தமல்லியில் உள்ள அனைத்து மாடு ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சிகிச்சையும் அளிக்கப்பட்டது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி டாக்டர் பெரியார் ராமசாமி, அமுதா பேசினர். முகாமிற்கான ஏற்பாடுகளை சித்தமல்லி ஊராட்சி மன்றத் தலைவர் குணசீலன் செய்திருந்தார்.

Tags : Veterinary ,Chittamalli ,Needamangalam ,
× RELATED அரவக்குறிச்சி அருகே கால்நடை...