திருமயத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம்

திருமயம், டிச. 8: திருமயத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி ஆலோசனையின்படி சைல்டு லைன் மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு அறிவுறுத்தலின்படி திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் தலைமையில், துணைத் தலைவர் சையது ரிஸ்வான் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு எண் 14417 உள்ளிட்ட எண்களின் சட்ட நடவடிக்கைகள் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா, 1098 திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி ஆகியோர் கூட்டாக விளக்கி கூறினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: