×

செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செந்துறை, டிச.8: அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட, இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் முதலமைச்சர் ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தினை காணொலிக்காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். பொதுமக்களின் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணப் பதிவுகள், வில்லங்கச்சான்று வழங்குதல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் வழங்குதல், பல்வேறு திருமணச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற முக்கிய பணிகளை ஆற்றிவரும் சார்-பதிவாளர் அலுவலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அளித்திடவும், பணியாளர்களின் பணியினை எளிமைப்படுத்தும் வகையிலும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திருச்சிராப்பள்ளி பதிவு மண்டலம், அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தினை முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்துள்ளார். புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்து, சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திருச்சி மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் லதா, மாவட்ட பதிவாளர்கள் உஷாராணி, தேன்மலர், சார்பதிவாளர் முருகவேல், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கொடிநாள் நிதி வசூல் துவக்க விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கொடிநாள் நிதி வசூலினை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு, நிதி வழங்கி துவக்கி வைத்தார். பிறகு 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் கொடிநாள் நிதி வசூல் அதிகம் வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags : Chief Minister ,Delegate ,Irumbulikurichi ,Sendurai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...