×

திருவையாறு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

திருவையாறு,டிச.8: தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தேர்வான தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, உதவி திட்ட அலுவலரின் ஆலோசனை படியும் திருவையாறு ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இரண்டாம் கட்ட தொடக்க நிலை பயிற்சி 50 தன்னார்வாலர்களுக்கு, உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களின் 17 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று காரணத்தினால் பள்ளி கல்வியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர் செய்யவும் குழந்தைகளின் மனநிலையை அறிந்திடவுடம், கதை கூறுதல், கேட்டல், பாடுதல், விளையாடுதல், படம் வரைதல் கலை கைவண்ணத்தில் ஈடுபடுதல் போன்ற மன மகிழ்ச்சியான செயல்பாடுகள் என்பதற்காக இப்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை திருவையாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார் மற்றும் எட்வர்ட் ஜெயராஜ் ஆகியோர் துவக்கி வைத்து உரையாற்றினார். இப்பயிற்சியினை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா சிறப்புரையாற்றி தொடங்கிவைத்தார். இதில் கருத்தாளர்கள், ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...