×

அமைச்சர் சக்கரபாணி வழங்கினார் குற்ற வழக்குகளில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


மன்னார்குடி, டிச. 7: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட கெலுவத்தூர் பண்டார ஓடை, மூலக் கால் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் (59) என்பவர் கடந்த மாதம் 9ம் தேதியன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர் பெருகவாழ் ந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து திருவாரூர் எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் முத்துப்பேட் டை டிஎஸ்பி வெள்ளத்துரை எஸ்ஐ சுரேந்தர் தலைமையில் ஒரு தனிப்படை யை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். அதில் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் நாகம்மாளை அவரது சொந்த அக்கா மகனான கூத்தாநல்லூர் அடுத்த தென் கோவனூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் (எ) ராஜ்குமார் (39) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதுபோல், மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக போலி மது பாட்டில்கள் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலநத்தம், ஒத்தவீடு பகுதியை சேர்ந்த சரவணன் (39) என்பவரை எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலச்சந்தர் தலைமை யிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எஸ்பி விஜயகுமார் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவு நகலினை இன்ஸ்பெக்டர்கள் மன்னார்குடி விஸ்வநாதன், பெருகவாழ்ந் தான் சிவப்பிரகாசம் ஆகியோர் நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரிடமும் வழங்கி அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் விரைந்து செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், சிவப்பிரகாசம் ஆகியோரை எஸ்பி விஜயகுமார் பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில், இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி விஜய குமார் தெரிவித்தார்.

Tags : Minister ,Chakrabarty ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...