×

முத்துப்பேட்டையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

முத்துப்பேட்டை, டிச.7: முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா தலைமையில் நடைப்பெற்றது. ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, நகர பொருளாளர் கருணா செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் குணா கண்ணதாசன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் வெற்றி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ambedkar ,Memorial Day ,Muthupet ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...