அறந்தாங்கி அருகே பள்ளத்தி வயலில் மண்வள தினம் கொண்டாட்டம்

அறந்தாங்கி, டிச.7: அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளத்திவயல் கிராமத்தில் மண்வள தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர்வணி ஊராட்சி மன்றத்தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறந்தாங்கி வட்டார வேளாண்மை அலுவலர் பாக்யலெட்சுமி தலைமை வகித்து மண் மாதிரி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள், மண் மாதிரி சேரிக்க வேண்டிய காலம், மண் மாதிரி சேகரித்தல் முறைகள், சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை கால் குறைப்பு முறைகள், பயிர்கள் வாரியாக மண் மாதிரிகள் எடுக்கும் ஆழம், மண் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டிய விபரங்கள் பற்றியும் மண்ணிற்கு தேவையான பேரூட்ட, மற்றும் நுண்ணூட்ட சத்துகள் பற்றியும் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடுகள் குறித்தும் அங்கக பண்ணையத்தின் மூலமாக மண்வள பாதுகாப்பு பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பின்பு துணை வேளாண்மை அலுவலா பாண்டிமுருகன், வேளாண்மையில் மண்வளங்களை பாதுகாப்பது, மண்வள அட்டையின் அடிப்படையில் உரமிடுவது குறித்தும், உதவி வேளாண்மை அலுவலா சந்திரசேகரன் மண் மாதிரி சேகரித்தல் முறைகள் பற்றி செயல்வளக்கம் வாயிலாக எடுத்துரைத்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவிராஜன் வரவேற்று இந்நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் கல்பனாராணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் செய்திருந்தினர். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு முறைகள் பற்றிய தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் மற்றும் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது. முடிவில் மண்வள மேலாண்மைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Related Stories: