×

கலெக்டரிடம் வலியுறுத்தல் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்

தஞ்சை, டிச.7: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் வட்ட கிளை சார்பில் 6வது திட்டப்பேரவை, தஞ்சாவூர் சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலச் செயலாளர் ஜெயபால் துவக்க உரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை தலைவர் ராஜாராமன், அனைத்து ஓய்வூதியர் சங்கக் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தமிழ்மணி, மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் காணிக்கைராஜ், மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், தலைவராக முனியாண்டி, செயலாளராக கோவிந்தராஜ், பொருளாளராக உத்திராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணை தலைவர்களாக வீரையன், மேகநாதன், பவுல்ராஜ், இணை செயலாளர்களாக காமராஜ், கணேசன், சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டனர்.

பேரவை கூட்டத்தில், ”புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கம்யூட்டேசனுக்காக பிடித்தம் செய்யப்படும் கால அளவை, 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். ஓய்வூதியர்களின் உரிமையை பாதுகாத்திட வேண்டும். ஓய்வு பெற்ற சிபிஎஸ் சந்தாதாரர்களுக்கு பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து மருத்துவத்திற்கான முழு செலவையும் வழங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020-21ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்டுள்ள பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும்\” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Collector ,Electrical Retirement Parental Welfare Organization ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...