ராயனூர் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

கரூர், டிச.7: கரூர் ராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் தாந்தோணிமலைக்கு அடுத்ததாக அதிகளவு குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. கரூரில் வளர்ந்து வரும் பகுதிகளில் ராயனூரும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் வரை குறிப்பிட்ட தூரம் வரையிலும் சாலையின் இருபுறமும் தெரு விளக்கு இல்லாமல் உள்ளது. இதனால், அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ராயனூர் சாலையில் கூடுதலாக தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராயனூர் சாலையில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More