திருவில்லிபுத்தூரில் பாலத்தை மூழ்கடித்த பெரியகுளம் கண்மாய் நீர்

திருவில்லிபுத்தூர், டிச.6:  திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து கிணற்று தெரு பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தை போலீசார் தடை விதித்துள்ளனர் மேலும் சீனியாபுரம் விலக்கு பகுதியில் பேரிகார்டு வைத்து அந்த பாதையில் செல்லாமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தையை கிணற்று தெரு வழியே கம்மாபட்டி, மம்சாபுரம், கோட்டபட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ெசல்வது வழக்கம். தற்போது மறுகால் பாயும் கண்மாய் நீரால் மாற்றுப்பாதையில் செல்கின்றனர்.

Related Stories: