உலக மண் தினம் கொண்டாட்டம்

சின்னமனூர், டிச. 6: புலிகுத்தி கிராமத்தில் சின்னமனூர் உதவி வேளாண்மை அலுவலகத்திலிருந்து கிராம பஞ்சாயத்தும் இணைந்து உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை இயக்குனர் பாண்டி, வேளாண்மை அலுவலர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். ஒவ்வொரு சாகுபடிக்கும் மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து மண்ணில் ரசாயனம் கலக்காமல் இயற்கை உரங்களை இட்டு உயிர்க்கு உயிர் தரும் மண்புழுக்கள் அதிகளவில் வளர்த்து ஒவ்வொரு பயிர்களும் சாகுபடி செய்ய வேண்டும்.

முற்றிலும் ரசாயன உரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உயிர் உரங்களையே பயன்படுத்தி மண்ணை பாதுகாத்து நஞ்சில்லா உணவினை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு தரவேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மழை வளத்தை பெருக்க மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 40 விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதுபோல் கூழையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மண் விழா தினம் கொண்டாடப்பட்டது. இதில் போடி உதவி வேளாண்மை இயக்குனர் தேவேந்திரன் தலைமையில், அனைவருக்கும் மரக்கன்றுகள் நடவேண்டும். மழை வளம் பெருக்க வேண்டும் என்று விளக்கி துவக்கி வைத்தார். இதில் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: