தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கல் கருப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ வெங்கடேசன் வழங்கினார்.

சோழவந்தான், டிச. 6: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், சோழவந்தான் அருகே கருப்பட்டியில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜி.பி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேகர், ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஜெகன் வரவேற்றார்.

இதையடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ வெங்கடேசன் வழங்கினார். இதில் பொதுக்குழு ஸ்ரீதர், வாடிப்பட்டி பால்பாண்டியன், கார்த்திக், இளைஞரணி வெற்றிச்செல்வன், நல்லதம்பி, ஆனந்த், பால்கண்ணன், கிளைச் செயலாளர்கள் சுமன், முருகன், ஊராட்சி தலைவர்கள் ஈஸ்வரி பண்ணைச் செல்வம், அம்பிகா, சகுபர் சாதிக், துணைத் தலைவர் சித்ராதேவி மற்றும் சக்திவேல், அமானுல்லா, ரமேஷ், கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: