×

அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அக்.1 முதல் 702 ஏசி பஸ் இயக்கம்

சென்னை: தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பஸ்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாட்டில் நோய் தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து, தமிழக முதலமைச்சர் 10.5.2021 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படாமல் இருந்து வந்த குளிர்சாதன பஸ்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மீண்டும் இயக்க அனுமதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை செம்மையாக மேற்கொண்டு பேருந்தில் தொற்று பரவா வண்ணம் மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு 1.10.2021 முதல் இயக்கப்படவுள்ளன.எனவே, பயணிகள் இந்த பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்துப் பேருந்துகளிலும் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சானிடைசர் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் அளிக்க நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தக்க நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அக்.1 முதல் 702 ஏசி பஸ் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajakannappan ,AC ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,State Transport Corporation ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி