×

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

ஈரோடு, டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி டிச.,6ம் தேதி இடிக்கப்பட்டதையொட்டி, ஆண்டுதோறும் அந்நாளில் அசாம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாநில, மாவட்ட எல்லைகளிலும் மற்றும் செக்போஸ்ட்டுகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் நேற்று காலை அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதித்தனர். இதேபோல், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், மத வழிபாட்டு தலங்களில் இன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடமைகளை நுழைவு வாயிலேயே சோதனை செய்து, பின்னர், உள்ளே செல்ல அனுமதித்தனர்.

Tags : Babar Mosque Demolition Day ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் டிரோன் மூலம் கண்காணிப்பு