×

உடன்குடி, மெஞ்ஞானபுரத்தில் கன மழை வேகமாக நிரம்பும் குளங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் : விவசாயிகள் மகிழ்ச்சி

உடன்குடி,  டிச. 6: உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில்  தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளப்பெருக்கால் நீர்ப்பிடிப்பு  பகுதிகள், குளங்கள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த உடன்குடி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. அணைக்கட்டுகளில் பெய்த கனமழை, காட்டாற்று வெள்ளத்தின்  காரணமாக உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியிலுள்ள சடையநேரி, தாங்கை, வழுக்கை,  நகனை, பெட்டை, தருவை ஆகிய குளங்கள், நீர்ப்பிடிப்பு பகுதியான படுகை  உள்ளிட்ட ஏராளமான சிறு, சிறு குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இவ்வாறு குளங்கள் நிரம்புவதால் நங்கைமொழி, வேப்பங்காடு, அணைத்தலை,  அடைக்காலபுரம், குலசேகரன்பட்டினம் ஆகிய சாலையை தாண்டி மழைநீர் சென்று  வருகிறது.

இந்த வெள்ளநீர்களை பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக சென்று  பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் நீர் நிலைகள்  முழுமையாக நிரம்பியதின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து  தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து
உடன்குடி யூனியன் சேர்மன்  பாலசிங் தலைமையில் பஞ்சாயத்து தலைவர்கள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து  குளங்கள் முழுமையாக நிரம்புவதற்கும் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கும் பெரும்  முயற்சி எடுத்த அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி  தெரிவித்தனர். மேலும் தொடர்ந் சடையநேரி குளத்தின் கிழக்கு பகுதி ஷட்டர்  மூலம் பயன் பெறும் பத்தாங்கரை பகுதி ஓடைகளையும் விரைந்து சீரமைத்து அந்த  பகுதியில் wwஉள்ள குட்டைகளையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தண்ணீரை  சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Udankudi ,Menjanpuram ,
× RELATED ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்