×

குமரியில் மழை நீடிப்பு ஒரே நாளில் மேலும் 23 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில், டிச.6 : குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி கோதையாறு மலை பகுதியில் அதிகபட்சமாக  43 மில்லி மீட்டர் மழை  பெய்திருந்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆரல்வாய்மொழி 27 மி.மீ., முக்கடல் 24.7, கன்னிமார் 15.8, குழித்துறை 13.2, மயிலாடி 19.4, முக்கடல் 24.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 40.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 42.35 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 73.07 அடியாகவும், சிற்றார் 1, 16.47, சிற்றார் 2, 16.57 அடியாகவும் உள்ளன. பொய்கை 42.70, மாம்பழத்துறையாறு 54.12, முக்கடல் 25 அடியாகவும் உள்ளன. நேற்று முன் தினம் மழை காரணமாக 23 வீடுகள் பகுதியாக இடிந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் 4, விளவங்கோடு தாலுகாவில் 15, திருவட்டாரில் 2, கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகள் என மொத்தம் 23 வீடுகள் இடிந்துள்ளன. மழைக்கு இதுவரை பகுதி மற்றும் முழுமையாக என சுமார் 1400 வீடுகள் இடிந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...