×

திருவிசநல்லூர் கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு யாகம்

கும்கோணம்,டிச.6: கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் கிராமத்தின் சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு 12 அடி உயரத்தில் ஐந்து முகத்துடன் பஞ்சமுக பிரித்திங்கரா தேவியாக அருள் பாலிக்கிறார். அமாவாசை நாட்களில் இவ்வாலயத்தில் நடைபெறும் நிகும்பலா யாகம் மிகவும் பிரசித்திபெற்றது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு இவ்வாலயத்தில் மிளகாய் யாகம், பட்டுப்புடவை ஹோமம், மஹா பூர்ணாகுதி மகா அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. செல்வ வளங்களை அள்ளித் தருவதால் தமிழகத்தில் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிசநல்லூர் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு தங்களது வேண்டுதல்களை சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்து உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு செய்து வழிபட்டனர். கணேஷ் குமார் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை செய்தனர். ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் சிறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர். சிறப்பு நிகும்பலா யாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி லட்சுமி நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு செய்தனர்.

Tags : Chidambaraswarar Swamy Temple ,Thiruvisanallur village ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்