தஞ்சை மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு விவசாயிகள் அவதி

தஞ்சை,டிச.6: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் மிச்ச மீதி உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க நெற்பயிருக்கு அத்தியாவசிய உரமாக சாம்பல் சத்து தரக்கூடிய பொட்டாஷ் உரம் உடனே தேவைப்படுகிறது. ஆனால் இந்த உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட தனியார் கடைகளில் முற்றிலும் இல்லாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த உரங்களை காலத்தோடு இட்டால்தான் பயிர்களை பாதுகாக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட தனியார் கடைகளில் பொட்டாஷ் உரம் போதுமான இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

More