தா.பழூர் அருகே கால்நடைகள் மருத்துவ முகாம்

தா.பழூர்,டிச.6: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சாத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் தற்போது பெய்து வந்த கனமழையின் காரணமாக பல நாட்களாக அரசு கால்நடை துறையின் மூலமாக கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படாமல் இருந்தன. இப்பகுதிகளில் உள்ள ஒரு சில கிராமங்களில் ஆடு, மாடுகள் மழையினால் நோய்வாய்ப்பட்டன. இதனை தொடர்ந்து கால்நடை துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் தற்போது ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கால்நடை துறையினர் கால்நடை முகாம்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து முத்துவாஞ்சேரி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே கால்நடை துறையின் சார்பாக ஆடு மாடுகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை கொண்டு வந்து மழைக்கால நோய்களை தடுக்கும் பொருட்டு தடுப்பூசிகளை போட்டு சென்றனர். மேலும் நோய் வாய் பட்ட ஆடு மாடுகளுக்கும் ஊசிகள் போடப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி மருத்துவர் வெற்றி வடிவேலன், கால்நடை மருத்துவ முகாமை நடத்தி கால்நடைகளுக்கு ஊசி மருந்துகளை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: