மாநகர காவல் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

திருச்சி, டிச. 5: திருச்சி மாநகரில் 15 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்ஐக்களை பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் பொறுப்பேற்றனர். மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக நிக்சன், கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக அரங்கநாதன், கன்டோன்மென்ட் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன், செக்யூரிட்டி இன்ஸ்பெக்டராக தயாளன், சைபர் கிரைம் செல் இன்ஸ்பெக்டராக வேல்முருகன், பொன்மலை இன்ஸ்பெக்டராக தனசேகரன், மாநகர குற்றப்பதிவேடு ஆவண காப்பகம் இன்ஸ்பெக்டராக முருகவேல், கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டராக சேரன், எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டராக பரணிதரன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக சிவகுமார் ஆகியோர் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

Related Stories:

More