வலங்கைமான்- வெண்ணாறு பாலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வலங்கைமான்,டிச.5: வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் வரை பழுதடைந்துள்ள சாலையினை சீர்படுத்த வேண்டும் என வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு வலியுறுத்தி உள்ளது. வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாககுழு கூட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் கட்சியின் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பழுது அடைந்துள்ள கிராம சாலைகள் மற்றும் வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை உடனடியாக செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More