×

கும்பகோணம் சாக்கோட்டை மாதா கல்வி குழுமத்தின் முப்பெரும் விழா

கும்பகோணம்,நவ.5: கும்பகோணம் தாலுகா சாக்கோட்டையில் அமைந்துன்ள மாதா கல்வி குழுமத்தில் பாதுகாவலர் புனித சவேரியார் திருநாளும், உலக மாற்று திறளாளிகள் தினவிழாவும் மற்றும் மாதா மாற்று திறனாளிகள் மேல் நிலைப்பள்ளியின் வெள்ளிவிழாவும் நடைபெற்றது, மாதா காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை ஜோதிமணி வரவேற்றார், கும்பகோணம் மறை மாவட்டம் ஆயர் அந்தோணிசாமி தலைமை வகித்து, மாதா மாற்றுதிறனாளிகள் மேல்நிலைபள்ளியின் வெள்ளிவிழா மலரை வெளியிட்டார்.

முதல் பிரதியை தொழில்அதிபர் ராயா குரூப்ஸ் ராயா கோவிந்தராஜன் பெற்றுக்கொண்டார். குடந்தை எம்எல்ஏ அன்பழகன், கும்பகோணம் தூயஅலங்கர அன்னை பேராலயம் மறைவட்ட முதன்மை குரு பேர்ருள்தந்தை தேவதாஸ் ஆகியோர் பேசினர். மேலும் மாதா மாற்றுதிறனாளிகள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், ஆயர் அந்தோணிசாமி , மாதா காதுகேளாதோர் மேல்நிலைபள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் எம்எல்ஏ அன்பழகன், பேச்சுத்திறன் பயிற்சிகூடம் அருள் தந்தை தேவதாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். எம்எல்ஏ அன்பழகன், தஞ்சை மாவட்ட மாற்று திறனாளிகளின் நலஅலுவலர் சாமிநாதன், ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களும் பரிசு பொருட்களும் வழங்கினர். மாதா மாற்றுதிறனாளிகளின் மேல்நிலைப்பளியின் முதுகலைஆசிரியை கீதா நன்றி தெரிவித்தார் மாதா கல்வி குழும நிறுவனங்களின் தாளாளர் மரியசெல்வம், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags : Kumbakonam ,Sakkottai Mata Education Board ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி