×

பாபநாசம் ஒன்றியம், பேராவூரணியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

கும்பகோணம்,டிச.5: கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்க விழா நடந்தது. கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் பசுபதிகோவில் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாணவ, மாணவிகள் மற்றும் கலைக்குழு மூலம் வீதி நாடகம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி மையத்தை  எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார். இல்லம் தேடி கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கி, மேளதாளத்துடன் ஊர்வலமாக மையத்திற்கு  தலைமையாசிரியர் அமிர்தவள்ளி அழைத்து வந்தார். நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு  தலைவர் முத்து மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா,  ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

இதேபோல் கஞ்சங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சி  நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வைரவன் துவக்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தன்னார்வலர்களின் செயல்பாடு குறித்து  பேசினார்.

Tags : Papanasam Union ,Peravurani ,
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு