×

பூதலூரில் 1500 பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி

வல்லம், நவ.5: பூதலூரில் மக்கள் இயக்கம் சார்பில் 1500 பனைமர விதைகள் மற்றும் 150 பழக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூரில் இயங்கி வரும் வேளாண் விற்பனை குழு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உட்பட பல இடங்களில் பனை மர விதைகளும், சீத்தா பழ மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பூதலூர் ஒன்றிய மக்கள் இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் சித்தமருத்துவர் தியாகராஜன், பாலதண்டாயுதபாணி, ஜாகிர் உசேன், முத்துராமன், முருகானந்தம், சுதாகர், குமார் மற்றும் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தாமஸ், இளநிலை உதவியாளர் கோபிநாத், அலுவலக உதவியாளர்கள் செல்வராஜ் கபிலன், தஞ்சாவூர் மாவட்ட ஐயப்ப தர்ம சேவா சங்க பொறுப்பாளர்கள் தங்கமணி குருசாமி, கடமங்குடி குருசாமி, ஒரத்தூர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பனைமர விதைகள் மற்றும் சீத்தாபழ மரக்கன்றுகளை நட்டனர். இதேபோல் பூதலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பனைமர விதைகள் மற்றும் சீத்தா பழமரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Puthalur ,
× RELATED பூதலூர்-தஞ்சை இடையே