கோட்டைப்பட்டினம் ஸ்டேஷனில் எஸ்பி ஆய்வு

அறந்தாங்கி, டிச.5: கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் காவல் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி மனோகரன், கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் எஸ்பி நிஷா பார்த்திபனை வரவேற்றனர்.

Related Stories:

More