ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயிலில் பகல் பத்து துவங்கியது

பெரம்பலூர்,டிச.5: பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து தொடங்கியது. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பெரம்பலூரில் உள்ள மரகதவள்ளித்தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் வரும் 13ம்தேதி மோகினி அலங்காரத்தில் சுவாமி ஊர்வலமும், 14ம்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதற்காக பகல்பத்து முதல் நாளான நேற்று (4ம்தேதி) பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட் பிரகாரதை வலம் வந்தார். இதனையொட்டி சிறப்பு பூஜையும், ஆராதனையும் நடத்தப்பட்டது. பூஜைகளை பட்டாபிராமன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அனிதா மற்றும் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, எளம்பலூர், விளாமுத்தூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பெருமாளை பக்தியுடன் வழிபட்டனர்.

Related Stories: