மருதூர் அரசு பள்ளியை சேர்ந்த சாதனை மாணவனுக்கு திமுக பாராட்டு

வேதாரண்யம், டிச.5:  வேதாரணயம் தாலுகா மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10ம் மாணவன் வீரதரன் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று 40 சான்றுகளை பெற்றுள்ளார். தற்போது அரசு சார்பில் இணைய வழியில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று துபாய் நாட்டுக்கு செல்ல தேர்வாகியுள்ளார். இந்த சாதனை மாணவனுக்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டி நிதிஉதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம், திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் உதயம் முருகையன், திமுக நகர செயலாளர் புகழேந்தி, தொண்டரணி அமைப்பாளர் துரைராஜ், இளைஞரணி அமைப்பாளர் அசோக், மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ், பள்ளி தலைமையாசிரியர் பொதுவுடை செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: