×

அதிகபட்சமாக மாயனூரில் 30 மிமீ கரூர் மாவட்டத்தில் விடிய,விடிய மழை

கரூர், டிச.5: கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மாயனூரில் 30 மி.மீட்டர் மழை பதிவானது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வடகிழக்கு பருவ மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக மழை பெய்துள்ள மாவட்டங்களில் கரூர் மாவட்டம் ஒன்றாகும். இதன் அடிப்படையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு.

கரூர் 19, அரவக்குறிச்சி 7 அணைப்பாளையம் 5, கிருஷ்ணராயபுரம் 18, மயிலம்பட்டி 15, மாயனூர் 30. அதிகபட்சமாக மாயனூரில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணிக்கு மேல் காலை 10 மணி வரை நல்ல மழை பெய்தது. சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 10.30 மணிமுதல் பகல் 12 மணிவரை திடீர் கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வாரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கனமழையால் பாதிக்கப்பட்டது.
குளித்தலை: இதேபோல் குளித்தலை பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் லேசான தூறல் மழை சுமார் அரைமணிநேரம் வரை பெய்தது. மதியத்திற்கு மேல் நன்றாக வெயில் அடித்தது.

Tags : Mayanur ,Vidya Karur district ,
× RELATED மாயனூர் ரயில்வே கேட் அருகே வாகனங்கள்...