நகரில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததுதவுட்டுபாளையத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

வேலாயுதம்பாளையம், டிச.5: தவுட்டுபாளையத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 350க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வேலாயுதம்பாளையம் அடுத்த தவுட்டுபாளையத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் டாக்டர் கண்ணன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்துகொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.

 முகாமில் சுமார் 350க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சையில் ஆடுகள் மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கமும், மாடுகளுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட கால்நடை வளர்ப்போருக்கு மழைக்கால நோய் தடுப்பு வழிமுறைகள், கோமாரி நோய் தொற்றிலிருந்து மாடுகளை பாதுகாப்பதற்கான அறிவுரைகளை கால்நடை மருத்துவர் வழங்கினார்.

Related Stories: